சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா!
ADDED :3401 days ago
சின்னமனூர்: சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி, ஆடி அமாவாசை, ஆடி பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அளவுக்கு அளவாய் நின்ற பூலாநந்தீஸ்வரர் சன்னதியில் முன்னோர்களின் பெயரில் அர்ச்சனை நடைபெற்றது. சிவகாமியம்மன் சன்னதியில் மாங்கல்யம் நீடிக்க நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். தட்சணாமூர்த்தி சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மஞ்சள் வஸ்திரம் சாத்தி பெண்கள் வழிபட்டனர்.