அருப்புக்கோட்டை கோயில்களில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
ADDED :3401 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயில்களில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் குருவிற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகம் செய்யப்பட்டது. அருப்புக்கோட்டை சவுண்டம்மன் கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது. திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில், குருபெயர்ச்சியை முன்னிட்டு குருவிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருச்சுழி குண்டாற்றில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.