ராஜபாளையம் மற்றும் சுற்றுபகுதிகளில் குருபெயர்ச்சி விழா
ADDED :3401 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுபகுதிகளில் அறநிலையத்துறை மற்றும் தனியார் சிவாலயங்களில் குருபெயர்ச்சி விழா நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. பக்தர்கள் மஞ்சள் வேஷ்டி அளித்து நெய்விளக்கு ஏற்றி, வழிபட்டனர். இதுபோல், நவக்கிரங்களில் உள்ள குருபகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.