உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தைவெளி சாமுண்டீஸ்வரி!

மந்தைவெளி சாமுண்டீஸ்வரி!

சென்னை மந்தைவெளி-செயின்ட் மேரீஸ் சாலையில் வி.சி. கார்டன் முதல் தெருவில் சாமுண்டீஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. ஆடிப் பூரத்தன்று இந்த அம்மனுக்கு நடத்தப்படும் வைபவம் மிகவும் விசேஷமானது. சீமந்த விழா எப்படிக் கொண்டாடுவார்களோ, அதே போல் பழ வரிசைகள், வளையல்கள், சீப்பு, சோப்பு போன்று சீர்வரிசை செய்து அன்னை சாமுண்டீஸ்வரிக்கு நலங்கிட்டு திருஷ்டி கழித்து பக்திப் பாடல்கள் முழங்க வளையல்காப்பு நடைபெறும். ஒன்பது வகை அன்னங்களுடன் நைவேத்தியம் செய்து கன்னிப்பெண்கள், புத்திரப் பாக்கியம் வேண்டும் பெண்கள் அனைவரும் சேர்ந்து வழிபட்டு வளையல்களை பிரசாதமாகப் பெற்றுச் செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !