மடுகரை பெருமாள் கோவிலில்புரட்டாசி மாத திருமஞ்சனம்
ADDED :5136 days ago
நெட்டப்பாக்கம்:மடுகரை குரு நகர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருமஞ்சனம் நடந்தது.இதையொட்டி, புரட்டாசி மாதத்தின் முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சகஸ்ரநாமம் செய்யப்பட்டது. 6 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதைத் தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. ராமானுஜ பஜனை சபாவினரின் பஜனை இடம் பெற்றது. பக்தர்களுக்கு துளசி தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது.புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் நித்தியகல்யாணி செய்துள்ளார்.