உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை: அழகர்கோவிலில் தீர்த்தமாட பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்!

ஆடி அமாவாசை: அழகர்கோவிலில் தீர்த்தமாட பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்!

அழகர்கோவில்: ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி மற்றும் 18ம் பெருக்கை முன்னிட்டு அழகர்கோவில் நுாபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராட பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த முக்கிய நாட்கள் சேர்ந்து வந்ததால் அழகர்கோவில் மலை மீது உள்ள நுாபுரகங்கையில் புனித நீராட நேற்று முன் தினம் இரவே பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். 3 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, ராக்காயி அம்மனை தரிசித்தனர்.

சோலைமலை முருகன் கோயில்: சோலைமலை முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு அதிகாலை பாலாபிஷேகம், அர்ச்சனை முடிந்து விஸ்வரூப தரிசனம் முடிந்து 3.30 மணிக்கு நடை திறந்தனர். தங்க கவச அங்கி அணிந்து, வைர கிரீடம், வைர வேலுடன் சுவாமி காட்சியளித்தார். புனித நீராடிய பக்தர்கள் முருகனை தரிசித்தனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு காலை 9.00 மணிக்கு சண்முகர் மண்டபத்தில் யாகம் வளர்க்கப்பட்டது. பூர்ணாஹூதி முடிந்து சண்முகருக்கு பல்வேறு அர்ச்சனை, ஆராதனைகள் நடந்தன. பகலில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. மலை அடிவாரத்தில் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி சன்னதி, சுந்தரராஜ பெருமாள் கோயிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !