உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

சிதம்பரம்: ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்  களையிழந்து காணப்பட்டது. ஆடி பட்டத்தில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்யத் துவங்குவர். ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இருக்கும்.  விவசாயம் செழிக்கவும், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு என கொண்டாடுவது  வழக்கம்.

இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுவதால், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் உற்சாகம் இழந்து  காணப்பட்டது.  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் தண்ணீர் ஊற்று ஓடும் கொள்ளிடம் ஆற்றில் வழிப்பட்டனர். புதுமண தம்பதியினர்  ஆற்றில் முகூர்த்த மலைகளை விட்டு வழிபட்டனர். 

பெண்ணாடம்: கோட்டைக்காடு வெள்ளாறு மற்றும் பெலாந்துறை அணைக்கட்டு தண்ணீரில் ÷ காட்டைக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, புதுப்பாளையம், பெண்ணாடம், மாளிகைகோட்டம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த புதுமண  தம்பதிகள் திருமண மாலைகளை தண்ணீரில் விட்டு வழிபட்டனர். சுமங்கலி பெண்களும் ஆற்றங்கரையில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து, வளை யல், தாலி கயிறு ஆகிய பொருட்களை வைத்து சூரிய பகவானை வழிபட்டு, புதிய தாலி கயிறை மாற்றி, அணிந்து கொண்டனர். அதேபோல், விரு த்தாசலம் மணிமுக்தாற்றில் தண்ணீர் இல்லாததால், ஊற்று நீர் எடுத்து அதில், புதுமணத் தம்பதிகள் மாலைகளை விடுத்து, தாலிகயிற்றை மாற்றிக்  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !