அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 101 பால்குட அபிஷேகம்
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலத்தை முன்னாள் சபாநாயகர் சபாபதி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். பால்குட ஊர்வலம் முருங்கப்பாக்கம்-வில்லியனுார் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பகல் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு அக்னிகரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பாலசுந்தரம் மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.