விழுப்புரம் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சியொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. குரு பகவான், சிம்ம ராசியிலி ருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9:30 மணியளவில் இடம்பெயர்ந்தார். இதையொட்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள தனி சன்னதியில் நேற்று முன்தினம் இரவு குரு காயத்ரி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவானுக்கு ÷ நற்று காலை சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் சாற்றி மகா தீபராதனை நடந்தது. அதேபோல், திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷகம் அலங்காரம் குருதட்சணாமூர்த்தி கலச பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நவக்கிரக சாந்தி பரிகார ேஹாமங்கள் குரு பகவானின் மூலமந்திரம் மாலாமந்திரம் காயத்திரி மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது. கடம் புறப்பாடாகி நவக்கிரகத்தில் அமர்ந்திருக்கும் குரு பி ரகஸ்பதி குருதட்சணாமூர்த்திக்கு மகா அபிஷகம் 9:26 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. செஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில், குரு பகவனுக்கு விசேஷ ஹோமம் செய்தனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில், குரு பகவானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் செய்தனர். களளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில், குரு கலச ஆவாஹனம் செய்தனர். இது÷ பான்று, ஏமப்பேர், நீலமங்கலம், தண்டலை, வரஞ்சரம், வடக்கநந்தல், தென்பொன்பரப்பி, சின்னசேலம் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சி றப்பு பூஜைகள் நடந்தது.