காரைக்காலில் ஆடிப்பெருக்கு கோலாகலம்
காரைக்கால்: ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காரைக்கால் அரசலாற்றங்கரையில் நேற்று ஏராளமானோர் மங்கலப் பொருட்களை வைத்து வழிபாடு செய்தனர். காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலில் அரசலாறு, வாஞ்சியாறு, திருமலைராயனாறு ஆகிய ஆறுகளின் கரையோர ங்களில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் பல இடங்களில் காவிரி நீர் வராத நிலையில், கடைமடை பகுதிய õன காரைக்காலில் தடுப்பணை மூலம் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில், ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அதிகாலையில் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, விளக்கு ஏற்றி, மங்கலப் பொருட்கள், பழங்கள், வைத்து பூஜை செய்து வழிபட்டனர். புதுமண தம்பதிகள் புத்தாடை அணிந்து காவிரியை வணங்கி, பூஜை செய்து, தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலையை ஆற்றில் விட்டனர். மேலும், புதிய தா லிக்கயிறும் மாற்றிக் கொண்டனர்.