உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி செய்யப்படுமா?

சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதி செய்யப்படுமா?

தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அடிப்படை வசதி இன்றி பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தியாகதுருகம்  அடுத்த சித்தலுாரில் மணிமுக்தா ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆடிமாதம் என்பதால் பக்தர்கள் கூட்டம்  அதிகரித்துள்ளது. கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.  இவர்களுக்கு போதிய அடிப்படை வசதியின்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஆற்றில் நீரோட்டம் இன்றி உள்ளதால் குளிப்பதற்கு தண்ணீர்  இன்றி வயல்வெளிபாசன கிணறுகளை தேடிச்செல்லும் நிலை உள்ளது. அதேபோல் இங்கு கழிவறை இன்றி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி  வருகின்றனர். இதற்கு தீர்வாக கோவில் அருகில் கழிவறையை கட்டி அதனை சுத்தமாக பராமரிக்கவும், பக்தர்கள் குளிக்க தண்ணீர் வசதியை  ஏற்படுத்திடவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !