உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருணா சாயிபாபா கோவிலில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை

கருணா சாயிபாபா கோவிலில் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை

செஞ்சி: காரியமங்கலம் கருணா சாயிபாபா கோவில் ராஜராஜேஸ்வரிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது.  செஞ்சியை அடுத்துள்ள காரியமங்கலம் க ருணா சாயிபாபா கோவில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது.  இதை முன்னிட்டு காலை  10:00 மணிக்கு அம்மனுக்கு 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்த னர். மலர் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து 10:30 மணிக்கு, திருவிளக்கு பூஜை  நடந்தது.  இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். பின், மகா தீபாராதனை நடந்தது. பூ ஜைகளை பாபா கணேஷ் அய்யர் செய்தார். கோவில் நிர்வாகி ரகுநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !