உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் ஆடிப்பெருக்கு, அமாவாசை குருப்பெயர்ச்சி வழிபாடு!

கோவை கோவில்களில் ஆடிப்பெருக்கு, அமாவாசை குருப்பெயர்ச்சி வழிபாடு!

கோவை: ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கோவையிலுள்ள சிவன் மற்றும் அம்மன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி விழா, கோவை கோவில்களில் விமரிசையாக நடந்தது. கோட்டை ஈஸ்வரன், இடையர்வீதியிலுள்ள பேட்டை ஈஸ்வரன், கோதண்டராமர் கோவிலிலுள்ள ஈஸ்வரன் சன்னதிகளில், ஆடி அமாவாசையையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். பெரியகடை வீதி கோனியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், அன்னபூர்னேஸ்வரி கோவில்களில், ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடந்தது. பட்டாடை, அணிகலன்கள், பூமாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

குரு பெயர்ச்சியையொட்டி கோட்டை சங்கமேஸ்வரர், சுக்கிரவார்பேட்டை பாலமுருகன், சாய்பாபா கோவில் நெசவாளர் காலனியிலுள்ள பாலசுப்ர மணியர், சாய்பாபா கோவிலில் உள்ள, நவக்கிரஹ சன்னதிகள், ராஜவீதி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. குருபகவானுக்கு சிறப்பு வேள்வி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி ஆகிய விழாக்கள், நேற்று ஒரே நாளில் வந்ததால், அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவையிலுள்ள சிவன், அம்மன், முருகன் கோவில்களில் நடந்த முப்பெரும், விழா வைபவத்தில்,பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்; சிறப்பு வேள்வியிலும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !