முத்துமாரியம்மன் கோவிலில் நாளை செடல் உற்சவம்
ADDED :3398 days ago
பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் லைனில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, நாளை செடல் உற்சவம் நடக்கிறது. கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மேற்சவ விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (4ம் தேதி) மாலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, முத்து விமானத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நாளை (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 9:00 மணிக்கு சக்தி கரகம் எடுத்து வருவதல், பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. 6ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 7ம் தேதி கும்பம் கொட்டுதல் நடக்கிறது.