உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூரில் நாளை தேரோட்டம்

திருக்கோஷ்டியூரில் நாளை தேரோட்டம்

திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடக்கிறது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில், ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு 11 நாட்கள் ஆடிப்பூர உற்சவம் கடந்த 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனத்தில் ஆண்டாளுடன் பெருமாள் திருவீதி உலா நடந்தது. இன்று மாலை தேருக்கு தலையலங்காரம் துவங்கும். இரவில் அன்னவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நாளை காலை 9 .10 மணிக்கு மேல் ஆண்டாளுடன் பெருமாள் திருத்தேர் எழுந்தருளுகிறார்.மாலை 4.48 மணிக்கு மேல் தேரோட்டம் துவங்கும். நாளை காலை தீர்த்தவாரி, இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !