ஆண்டாள் கோயில் தேரோட்டம் ஸ்ரீவி.,யில் போக்குவரத்து மாற்றம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் ஆடிப்பூரத்தேரோட்டம் நாளை (ஆக.4) நடப்பதையொட்டி, போக்குவரத்து மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இக்கோயில் ஆடிப்பூர விழா கடந்த ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நாளை காலை 8.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 3 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க நாளை காலை 5 மணி முதல் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மதுரை, தேனி, விருதுநகரிலிருந்து ஸ்ரீவி.,வழியாக ராஜபாளையம், செங்கோட்டை, திருநெல்வேலி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள்,கார்கள், ராமகிருஷ்ணாபுரம், சர்ச் முக்கு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நகராட்சி ஆபிஸ் வழியாகவும், ராஜபாளையத்திலிருந்து மதுரை, தேனி, விருதுநகர் செல்லும் பஸ்கள் இடையன்குளம் ராமகிருஷ்ணாபுரம் வழியாகவும், சிவகாசி யிலிருந்து ஸ்ரீவி., வரும் பஸ்கள் வழக்கம்போல் பஸ் ஸ்டாண்ட் வரலாம்.
கார் பார்க்கிங்: நகரின் வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி, கான்வெண்ட் காம்ப்ளக்ஸ் மைதானம், கிழக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் லயன்ஸ் பள்ளி விளையாட்டு மைதானம், தெற்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஓட்டல் சசிதரன் கிழக்கு பகுதி, வி.ஆர்.என்.ரைஸ் மில் பகுதி, பெருமாள்தேவன் பட்டி, வன்னியம்பட்டி வழியாக வரும் கார்கள், மினிபஸ் மற்றும் டவுண்பஸ், தனியார் பஸ்கள் மடவார்வளாகம் பகுதியில் நிறுத்த வேண்டும். ரதவீதிகள், மாடவீதிகள், பஸ் ஸ்டாண்ட் சுற்றிய ரோடுகளில் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கபடமாட்டாது.