உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முள்வாடி முனியப்பன் கோவில் திருவிழா

முள்வாடி முனியப்பன் கோவில் திருவிழா

அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே கூத்தம்பூண்டி முள்வாடி முனியப்பசாமி கோவில் திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்காக கடந்த ஜூலை மாதம், 22ம் தேதி பூச்சாட்டப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தில் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல், 12 மணிக்கு, பெரும் பூஜை செய்யப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதையடுத்து, 1 மணிக்கு ஆடுகள் பலி கொடுத்தும், பொங்கல் வைத்தும் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !