உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிளக்கு பூஜை

வீரராகவப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிளக்கு பூஜை

திருப்பூர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், இன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, இன்று, மாலை 5:30 முதல், 7:00 வரை, திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில், 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியுள்ள தாயார் நாமத்தை உச்சரித்து, 500க்கும் மேற்பட்ட பெண்கள், திருவிளக்கு பூஜை செய்கின்றனர்.நாளை மாலை, 6:30 முதல், 8:30 வரை, குருவாயூரப்பன் மகிமை என்ற தலைப்பில், ராமகிருஷ்ணனின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இரண்டு நாள் நிகழ்ச்சி துவக்கத்தில், விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யப்படுகிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இன்று தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !