ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று ஆடிப்பூர உற்சவம்
ADDED :3399 days ago
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் செங்கமலவள்ளி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூர உற்சவம் இன்று நடக்கிறது. ஆடி ப்பூர உற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு ஆண்டாளுக்கு திருமஞ்சனம், மாலை ஆண்டாள் சன்னதி உள் புறப்பாடு நடந்து வருகிறது. இன்று (5ம் தேதி) காலை 8:00 மணி முதல், 9:30 மணி வரை ராஜகோபாலன், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 10:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு சேவை சாற்றுமுறை, இரவு 7:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் சி றப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர்.