கடத்தூர் முனியப்பனுக்கு 1,000 கிடாய்கள் பலி
ADDED :3399 days ago
கடத்தூர்: கோபியை அடுத்த, கடத்தூர் அருகே முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. இங்கு பொங்கல் திருவிழாவை ஒட்டி, 1,000த்துக்கும் மேற்பட்ட கிடாய்கள் நேற்று பலி தரப்பட்டது. கடத்தூர், சுண்டாக்காம்பாளையம், கூடக்கரை, சாணார்புதூர், மூணாம்பள்ளி, செட்டிபாளையம், வெட்டையம்பாளையம், கரட்டுப்பாளையம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்றனர்.