செம்முனீஸ்வரர் கோவிலில் இன்று ஆடித்தேர் திருவிழா
ADDED :3399 days ago
அந்தியூர்: அந்தியூரை அடுத்த, வெள்ளிதிருப்பூர் செம்முனீஸ்வரர் கோவிலில், ஆடி தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது. கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழாவில், இன்று (5ம் தேதி) தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக குரும்பபாளையம் மடப்பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர்களில் செம்முனி ஆண்டவர், மன்னாதீஸ்வரர், பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலைகள் வனக்கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். கோவிலை சென்றடைந்ததும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை, 3 மணிக்கு அம்மனை அழைத்தல் மற்றும் காவு குட்டி வெட்டும் நிகழ்ச்சி நடக்கும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். வெள்ளித்திருப்பூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.