உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

பகவதியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

வெள்ளியணை: கரூர் அருகே, வெள்ளியணை வடக்கு தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, வெள்ளியணை பகுதியை சேர்ந்த மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, வாண வேடிக்கையுடன் புனித நீர் எடுத்து வந்தனர். புனித நீரை கொண்டு விநாயகர், மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !