12ல் 9ம் ஆண்டு ஆடி வெள்ளி:1,008 மஞ்சள் நீர் குடம் ஊர்வலம்
ஆர்.கே.பேட்டை;அம்மையார்குப்பம், சக்தியம்மனுக்கு, வரும் 12ம் தேதி, ஒன்பதாம் ஆண்டு, ஆடி வெள்ளி உற்சவம் நடைபெற உள்ளது. 1,008 மஞ்சள் நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அபிஷேகமும், மாலையில், 108 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகே, சக்தியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம், வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு உற்சவம் நடத்துவது வழக்கம். ஒன்பதாம் ஆண்டாக, வரும் 12ம் தேதி காலை, மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற உள்ளது.இதில், 1,008 குடம், மஞ்சள் நீர் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. காலை 9:30 மணிக்கு, பொன்னியம்மன் கோவிலில் இருந்து, மஞ்சள் நீர் குடங்கள் ஊர்வலம் துவங்குகிறது. 11:30 மணிக்கு, சக்தியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு, 108 குத்துவிளக்கு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு, மகாதீபாராதனை நடைபெறும்.