உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவந்திபுரத்தில் ஆடிப்பூர விழா பெருமாள் ஆண்டாள் வீதியுலா

திருவந்திபுரத்தில் ஆடிப்பூர விழா பெருமாள் ஆண்டாள் வீதியுலா

கடலுார்: திருவந்திபுரம், தேவநாத சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

திருவந்திபுரத்தில் ஆடிப் பூர உற்சவம், கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. தினமும் காலையில், ஆண்டாளுக்கு திருமஞ்சனமும், மாலையில், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்புறப்பாடும் நடந்து வந்தது. ஆடிப்பூரத்தையொட்டி,  (5.8.16) வெள்ளிக்கிழமை காலை, தேவநாத பெருமாள், ஆண்டாள், தேசிகர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஆண்டாள் சன்னதிக்கு பெருமாள் எழுந்தருளி பிரபந்த சேவையும், மாலையில், தேவநாத பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், ராஜேஷ் வைத்யா குழுவினரின் வீணை இசைக் கச்சேரி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !