திருப்புவனம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :3363 days ago
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகிம்மன் கோயிலில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு உண்டியல் எண்ணும் பணி (5.8.16) வெள்ளிக்கிழமை நடந்தது. பரமக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி தலைமையில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில், புனிதமரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 4 லட்சத்து 19 ஆயிரத்து 315 ரூபாயும், 29.300 கிராம் தங்க நகையும், 285.100 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.