வெள்ளோட்டத்துடன் நிற்கும் தங்கத் தேர் ஆடிதபசு விழாவில் இயக்க எதிர்பார்ப்பு
ADDED :3362 days ago
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் தங்க தேர் வெள்ளோட்டம் முடிந்து ஓராண்டாகியும் இயக்கப்படவில்லை. ஆடி தபசு விழாவிலாவது தேர் வீதி வர பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் எனும் சிவன் கோயில் உள்ளது. இங்கு தெய்வீக பேரவை சார்பில் பக்தர்களின் நன்கொடை மூலம் தங்க தேர் உருவாக்கப்பட்டு கடந்தாண்டு வெள்ளோட்டம் நடந்தது. ஆனால் விழாக்காலங்களில் தேர் வலம் வருவதில்லை. இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அனுமதி உத்தரவு வர வில்லை என்கின்றனர். இதனால் தேர் இயக்கப்படாமல் காட்சி பொருளானது. இதனிடையே 6.8.16 கொடியேற்றத்துடன் ஆடிதபசு விழா துவங்குகிறது. விழா நாட்களில் தேர் வீதி உலா வர பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.