ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணம்
ADDED :3359 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா, ஜூலை 27ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 12ம் நாள் விழாவான நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்கார மேடையில் இரவு 7.30 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர்.பின், கோயில் குருக்கள் மந்திரம் முழங்க யாக பூஜை நடந்ததும், இரவு 7.55 மணிக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் உள்பட பலர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகம், யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு அடங்கிய பிரசாத பாக்கெட், இனிப்புகள் வழங்கினர்.