செல்வமாரியம்மனுக்கு சரவிளக்கு பூவோடு
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் செல்வமாரியம்மன் ஆடி விழாவில், இன்று சரவிளக்கு வைத்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில் அமைந்துள்ள செல்வமாரியம்மன், பூபதி மாரியம்மன், முத்துகுமாரசாமி கோவில் ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் துவங்கியது. நேற்று மூன்று கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று, இரு மாரியம்மன் கோவில்களிலும் சரவிளக்கு வைத்து பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 9ம் தேதி செல்வமாரியம்மன் கோவிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி அக்னி கரக ஊர்வலம், பூ மிதித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 11ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 12ம் தேதி பூந்தேர், பூங்கரகம் ஊர்வலம், 13ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா முடிவடைகிறது.