நாகதேவதை கோவிலில் நாக பஞ்சமி விழா
ADDED :3353 days ago
சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டை, செல்லாண்டியம்மன் கோவில் முன், நாகதேவதை கோவில் உள்ளது. அங்கு, நாகபஞ்சமி விழாவையொட்டி, நேற்று காலை, 8 மணிக்கு, நாகதேவதைக்கு, பல்வேறு ஹோமம் நடந்தது. நாகதோஷ நிவர்த்திக்காக, பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பொங்கல் வைத்தல் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதில், சங்ககிரி சுற்றுவட்டார பெண்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஜலகண்டாபுரம் அடுத்த, ஆவடத்தூர், அண்ணாநகரில் உள்ள திருநாகலிங்கேஸ்வரர் கோவிலில், நாக பஞ்சமி விழா மற்றும் சிறப்பு யாகம், நேற்று நடந்தது. அதில், திருமண தடை, மாங்கல்ய தோஷம், நாகதோஷம், தாரதோஷம், கேது திசை நடப்பவர்கள், ராகு, கேது புத்தி நடப்பவர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.