ஜெயதுர்கா அம்மனுக்கு நலுங்கு வைத்து பூஜை
ADDED :3353 days ago
ராக்கிப்பட்டி: சேலம், ராக்கிப்பட்டியில் உள்ள ஜெயதுர்கா சண்டிகா பரமேஸ்வரி அம்மன் பிரார்த்தனை ஆலய டிரஸ்ட் சார்பில், ஆஷாடா நவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு, சுமங்கலி பெண்கள், தங்கள் கைகளால் குங்குமம், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை, பெண்களுக்கு வளைகாப்பு சமயத்தில் பூசி, நலுங்கு வைப்பது போல் செய்து, கையில் கண்ணாடி வளையல்களை அணிவித்து, வளைகாப்பு உற்சவம் செய்தனர். இதில், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை இல்லாத தம்பதியர் மற்றும் ஆரோக்கிய குறைவால் அவதிப்படுபவர்கள் கலந்துகொண்டு வேண்டினால், நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர்.