சுயம்பு நாகர் கோவிலில் நாகபஞ்சமி சிறப்பு பூஜை
ADDED :3353 days ago
ஈரோடு: நாக பஞ்சமியை ஒட்டி, காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடந்தது. ஈரோடு, காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில், விஸ்வகர்ம சார்பில் நாக பஞ்சமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வரர் பூஜை, நாகர் ஸகஸ்ர நாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே ஏராளமான ஆண்கள், பெண்கள் என வரிசையில் காத்திருந்து நாகரை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் பலர் தோஷ நிவர்த்திக்காகவும் வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது.