கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பால் குட ஊர்வலம்
ADDED :3353 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மிளகாய் தோட்டம் கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பால் குட ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையிலுள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. கணபதி ேஹாமத்துடன் துவங்கிய விழாவில் சாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டது.பெண்கள் குத்துவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து காரனுார் ஏரியிலிருந்து சக்தி அழைத்தல் நடத்தி பால்குட ஊர்வலம் நடத்தினர். பாஞ்சாலியம்மாள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சண்முகம் மற்றும் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.