14ல் சக்தி கொடியேற்றம் கஞ்சி கலயம் ஊர்வலம்
ஆர்.கே.பேட்டை:ஆடிப்பூரத்தை ஒட்டி, மருவத்துாரம்மன் கோவிலில், வரும் 14ம் தேதி, சக்தி கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு படைக்கப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் மருவத்துாரம்மன் கோவிலில், சக்தி கொடியேற்றம் நடக்கிறது. எட்டாம் ஆண்டாக நடைபெறும் ஆடி பூர விழாவில், வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 6:30 மணிக்கு, சக்தி கொடியேற்றம் நடக்கிறது. 9:00 மணிக்கு, திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 கஞ்சி கலயங்கள் ஊர்வலம் துவங்குகிறது. கங்கையம்மன் கோவில், சக்தியம்மன் கோவில், பொன்னியம்மன் கோவில் வழியாக வரும் ஊர்வலம், நிறைவாக மருவத்துாரம்மன் கோவிலை வந்தடைகிறது. அம்மனுக்கு படைக்கப்பட்ட கஞ்சி, பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்நது கோவில் வளாகத்தில், யாகம் வளர்த்து, சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.