உடையார்குடி மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
ADDED :3348 days ago
காட்டுமன்னார்கோவில்: உடையார்குடி மாரியம்மன் கோவில் தீ மிதி உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 22ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. 2ம் தேதி கொடி ஏற்றி காப்பு கட்டுதல் நிகழ்வு நடந்தது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 3ம் தேதி திருக்கல்யாணமும், புஷ்பபல்லக்கும், நடந்தது. அதனைத் தொடர்ந்து, 6ம் தேதி தீ மிதி திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.