மாரியம்மன் கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்
ADDED :3348 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையம் கொல்லியங்குளத்து மாரியம்மன் கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. இக்கோவிலில் திருத்தேர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பழுதானது. இதனையடுத்து கடந்த ஓராண்டாக, 37 அடி உயரத்தில் புதிய தேர் உருவாக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்தது. இதன் பணிகள் முடிந்து நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து, தொடர்ந்து காலை 9:30 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.