உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சிராயபாளையம் பகுதியில் விநாயகர் சிலை பணி தீவிரம்

கச்சிராயபாளையம் பகுதியில் விநாயகர் சிலை பணி தீவிரம்

கச்சிராயபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கச்சிராயபாளையம் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள்  தீவிரம் அடைந்துள்ளது.  ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு  வருகின்றது. விழாவின்போது விநாயகர் சிலைகள் பல பகுதிகளில் பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் செய்து, நீர் நிலைகளில்  கரைக்கப்படுகிறது.  விநாயகர் சதுர்த்தி விழா துவங்க ஒரு மாதமே உள்ள நிலையில், கச்சிராயபாளையம் பகுதியில் விற்பனைக்காக  விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.  இதன்படி ஒரு அடி முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள்  தயாரிக்கும் வேலையில், தொழிலாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !