தூய ஜான்மரி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி
ADDED :3544 days ago
புதுச்சேரி: ரெயின்போ நகர் துாய ஜான்மரி வியாண்ணி ஆலய ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. புதுச்சேரி ரெயின்போ நகர் துாய ஜான்மரி வியாண்ணி ஆலய ஆண்டு பெரு விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து தேர் பவனி நடந்தது. மயிலாடுதுறை மறை மாவட்ட முதன்மை குரு பங்குத் தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. தினந்தோறும் திருப்பலி, சிறிய தேர் பவனி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், சபாநாயகர் வைத்திலிங்கம், ஆலய பங்குத்தந்தை தோமினிக் ரொசாரியோ, காமராஜர் நகர் வட்டார காங்., செயலாளர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.