உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் நடந்த 20ம் ஆண்டு பால்குட அபிஷேக விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆடி மாதம் துவங்கி 14 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும் இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள், குடும்பத்துடன் வந்து தங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபடுவர். இவ்வாண்டு நேற்று முன்தினம் மாலை விழா துவங்கியது. அங்குள்ள தர்மராஜா கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து பால்குடம், தீச்சட்டி தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பவானியம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர், ஏராளமான பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்திக் கொண்டும், தேர்களை இழுத்தும் கோவிலை வந்தடைந்தனர். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்குஅருள் பாலித்தார். இதில் பம்பை, உடுக்கை, தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவை நடந்தது. விழா ஏற்பாடுகளை வேலுமயில் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !