உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனிதத்தை இழந்த வாசுகி தீர்த்த குளம் நயினார்கோவில் பக்தர்கள் வேதனை

புனிதத்தை இழந்த வாசுகி தீர்த்த குளம் நயினார்கோவில் பக்தர்கள் வேதனை

பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளம் கழிவுநீர் குட்டையாக மாறிவருவது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய பெருமைக்குரிய கோயில்களில் ஒன்று நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேற பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் புனித நீராடிய பின்னரே கோயிலுக்குள் சென்று சுவாமி, அம்மனை தரிசிப்பது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றியும், துார்வாரப் படமாலும் உள்ளதால் தண்ணீரின்றி வறண்டும், புதர் மண்டியும் காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் தேங்கி கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கிறது. மழைக்கு முன்பு கோயில் குளத்தை துார்வாரி துார்வாரி சுத்தபடுத்தவேண்டும். மழைநீர் தேங்க வசதியாக வரத்துவாரிகளில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !