உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணைப்பட்டி விருசின்னம்மாள் கோயிலில் சாமிகும்பிடு விழா

பண்ணைப்பட்டி விருசின்னம்மாள் கோயிலில் சாமிகும்பிடு விழா

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மடூர் பண்ணைப்பட்டியில் விருசின்னம்மாள் மற்றும் கொழுக்கட்டைமாலை பெரியவீடு மாலைக்கோயில் சாமி கும்பிடு விழா நடந்தது. கடந்த ஆக., 1ல் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தேவராட்டத்துடன் பெரிய வீட்டார் அழைப்பு மற்றும் போனம் சுமத்தல் நடந்தது. தாய்மாமன்களின் அழைப்பை தொடர்ந்து தாயாதிகளின்(பங்காளிகள்) பொங்கல் அழைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிறந்தவீட்டு பெண்களின் விலுவை அழைப்பு நடந்தது. பகலில் முன்னோர்களுக்கு பொம்மை படைக்கப்பட்டது. மாலையில் எருது ஓட்டம்நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது. பிறந்த வீட்டு பிள்ளகைளுக்கு கரும்பு வழங்கியதுடன் விழா நிறைவடைந்தது. கம்பம், தேனி, போடி, திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !