உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடையங்குப்பம் ஆடி திருவிழா:தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சடையங்குப்பம் ஆடி திருவிழா:தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவொற்றியூர்: சடையங்குப்பம் கெங்கையம்மன் கோவில் ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடபட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேத்திக் கடன் செலுத்தினர். சென்னை, திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டார பகுதிகளில், சடையங்குப்பம் பழமையான பகுதி. ஊருக்கு முன்புறம் புழல் உபரி கால்வாய், பின்புறம் கொற்றலை ஆறு, ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என நீர் நிலைகளின் நடுவே செழிப்பாக இருக்கும் ஊர். ஒரு காலத்தில் விவசாயத்தில் செழித்து விளங்கியது. இந்த ஊரில் அதிகபட்சம் 1000 க்கும் குறைவானவர்களே பூர்வீகமாக வசித்து வருகின்றனர். ஊருக்குள் இருக்கும் சடையங்குப்பம் ஏரி அருகே, கெங்கையம்மன் கோவில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், ஊர் மக்களால் உருவாக்கபட்டது. ஆண்டுக்கு ஒரு முறை, ஆடி மாதம் ஊர் கூடி கூழ்வார்த்தல் திருவிழாவை, கோலாகலமாகக் கொண்டாடுவர். இந்த ஆண்டில், நேற்று முன்தினம் மதியம் கூழ்வார்த்தல் மற்றும் இரவு தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.  ஊர் பொதுமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி சுமந்து வந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர், கூண்டு வேல், தீச்சட்டி, அலகு குத்தி, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில், ஊர் மக்களுடன், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கெங்கையம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !