உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழடியில் பழந்தமிழர் நகரம் கண்டுபிடிப்பு!

கீழடியில் பழந்தமிழர் நகரம் கண்டுபிடிப்பு!

சென்னை: பழந்தமிழரின் நகர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வைக் காண, கட்டடக் கலையையும்,  கட்டடக்கலை மாணவர்கள்,  கீழடிக்கு சென்று காண்பதற்கான வாய்ப்பை, தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.  சிவகங்கை மாவட்டம், கீழடி என்ற கிராமத்தில், 2014ல்,   இந்திய தொல்லியல் துறை, அகழாய்வு செய்தது. அங்கு, சிறந்த கட்டடக்கலை திறனுடன் கூடிய வீடுகள் அமைந்த  2,300 ஆண்டுகளுக்கு முந்தைய  நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வில், இதுவரை கிடைத்திராத தமிழரின் அரிய வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளன. அவை,  கட்டடக்கலை, வரலாறு, தொல்லியல், மானுடவியல், பண்பாட்டியல், கலை துறை மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளன.  இந்த நிலையில்,  சென்னையை சேர்ந்த, ‘தளி அறக்கட்டளை’ என்ற அமைப்பு, கீழடிக்கு கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பை  சேர்ந்த வித்யாலட்சுமி ராஜசேகர் கூறியதாவது: தளி அறக்கட்டளையும், தமிழக பாரம்பரிய சங்கமும் இணைந்து, தமிழகத்தின் தொன்மை, வரலாறு,  மரபு பொருட்கள் சார்ந்த கல்வியையும், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு களப்பயிற்சி அளித்து வரு கின்றன. தற்போது, கீழடிக்கு கல்வி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மரபுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வும், அவற்றின் பாதுகாப்பும்  தற்போது மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. நம் வரலாறு, பழம்  பெருமை பேசுவதோடு முடங்கி விட்டது. ஆனால், நமது பாரம்பரியத்தை அறிந்த வெளிநாட்டினர், அதில் உள்ள மருத்துவம், அறிவியல் சார்ந் தவற்றை ஆராய்ந்து, தம் அறிவியலுடன் இணைத்து, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர்.  இதனால், நம் பாரம்பரியத்தை,  பலதுறைகளுடன் ஒருங்கிணைந்த கல்வியாக மாற்ற வேண்டியது அவசியமாகும். தமிழகத்தில் சிறப்பு மிக்க கட்டடங்கள் இல்லை என்பது போன்ற  மாயையை கட்டடக்கலை பாடங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், கி.மு., 300ல், ஓடுகள் வேய்ந்து கூரையும், மிகப்பெரிய சுவரும், கிணறு  களும் அமைந்த நகரம்  கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் காலத்தையும், நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தையும் மாணவர்கள் அறிந்தால், நம் தொழில்நுட்பத்தின் மீது, நம்பிக்கை பெறுவ÷ தாடு, பழப்பொருட்களின் உள்ளே ஒளிந்திருக்கும் வரலாற்றையும், புரிந்து கொண்டு பாதுகாப்பர். கீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை,  இந்திய தொல்லியல் துறை அடுத்த மாதம் மூட உள்ளது. இதனால், அந்த இடங்களை பார்வையிட்டு, அறிஞர்களுடன் உரையாட மாணவர்களுக்கு  இந்த வாய்ப்பு பெரிதும் உதவும். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான இடங்களை  அறியவும் இந்த சுற்றுலா உதவும்.  சுற்றுலா, சென்னை கோயம்பேட்டில் இருந்து, இம்மாதம், 19ம் தேதி இரவு புறப்படும். சுற்றுலா கட்டணம், 3,000 ரூபாய். மேலும் விபரங்களுக்கு:  97860 68908, 73054 37393 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !