உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெம்மூர் முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

தெம்மூர் முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

சிதம்பரம்: தெம்மூர் முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிேஷகத்தையொட்டி சிறப்பு ஹோமம் நடந்தது. சிதம்பரம் அடுத்த தெம்மூர்  முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. தொடர்ந்து, கோவிலில் மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடந்தது.  நேற்று கோவிலில் மண்டலாபிேஷகம் பூர்த்தியையொட்டி அம்மன் சன்னதி முன் சிறப்பு ஹோமம், மற்றும் பூஜைகளை வெங்கடேச தீட்சிதர் செய் தார். தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்  செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !