உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம மக்கள் மழை வேண்டி.. புரவி எடுப்பு திருவிழா

கிராம மக்கள் மழை வேண்டி.. புரவி எடுப்பு திருவிழா

மானாமதுரை: மானாமதுரை அருகே மிளகனுார், நாராயணதேவன்பட்டி, சீனிமடை, கஞ்சிமடை, ராமனேந்தல் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் மழை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும் கிராம மக்கள் நலம் பெறவும் கைலாச அய்யனாருக்கு 14 வருடங்கள்  கழித்து புரவி எடுப்பு திருவிழா நடத்தினர். புதுக்குளம் வேளார் தெருவில் புரவிகள், காளைகள்,பொம்மைகள் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு புது  வேட்டி,துண்டு அணிவிக்கப்பட்டது. பின் ஊர்வலமாக மிளகனுார் விநாயகர்  கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன்  புரவிகளை சுமந்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !