சண்ட பிரசண்ட மாரியம்மனுக்கு ஆடி மாத உற்சவம்
ADDED :3360 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சண்ட பிரசண்ட மாரியம்மனுக்கு ஆடிமாத உற்சவ விழா நடந்தது. விழுப்புரம் நாப்பாளைய சந்து வீதியில் உள்ள சண்ட பிரசண்ட மாரியம்மன் கோவிலில், ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையொட்டி, காகுப்பம் அய்ய னாரப்பன் கோவிலிருந்து கரகம் ஜோடித்து முக்கிய வீதிகள் வழியாக உற்சவம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் குப்பம் படைத்தல் நடந்தது.