உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

அம்மாபேட்டை: பிரசித்தி பெற்ற, சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நேற்று துவங்கியது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பண்டிகை விழா விசேஷமானது. கடந்த, 26ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல், உருளுதண்டம் போடுதல் நிகழ்ச்சிகள் நேற்று துவங்கின. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். காலை முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்தும், உருளு தண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதேபோல் களரம்பட்டி பாலநாகமாரியம்மன் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், பொன்னமாபேட்டை புத்துமாரியம்மன் கோவில், அம்மாபேட்டை பலப்பட்டரை மாரியம்மன் கோவில், பட்டை கோவில் சின்னமாரியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், அம்மனு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !