பெருமாள் பக்தர்களுக்கு சுந்தரகாண்டம் வழங்கல்
ADDED :3361 days ago
பனமரத்துப்பட்டி: மல்லூர், கோட்டை மேடு கோவிந்தராஜா பெருமாள் கோவிலில், பக்தர்கள் தினமும் படிக்க சுந்தரகாண்டம் வழங்கப்படுகிறது. இது குறித்து, கோவில் அறங்காவலர் கிருஷ்ணய்யங்கார் கூறியதாவது: ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள, சுந்தரகாண்டம் பகுதியை பக்தர்கள் எளிதில் படித்து புரிந்து கொள்ளும் வகையில், அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுந்தரகாண்டம் வழங்கி, அதை நாள்தோறும் படிக்க வேண்டும் என, வேண்டுகோள் வைக்கிறோம். இதை தினமும் படிப்பவர்களுக்கு சங்கடங்கள் மறைந்து, வெற்றிகள் விரைவாக தேடி வரும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். பள்ளி குழந்தைகளின் படிப்பு நன்றாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.