உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவில் தேரோட்டம்: 5 ஆண்டு கழித்து நடந்ததால் உற்சாகம்

செல்லியம்மன் கோவில் தேரோட்டம்: 5 ஆண்டு கழித்து நடந்ததால் உற்சாகம்

தலைவாசல்: தலைவாசல் அருகே, செல்லியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. தலைவாசல், தேவியாக்குறிச்சியில் ஆடி மாதத்தை முன்னிட்டு, செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பால் குட ஊர்வலம் என, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நேற்று காலை பொங்கல் வைத்து வழிபாடு செய்ததுடன், தேன், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், தேரில் செல்லியம்மன் அமர வைக்கப்பட்டு, ஊரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறாமல் இருந்தது. நேற்று நடந்த தேர் திருவிழாவை சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !