ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை
ADDED :3361 days ago
வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள் குரு பூஜை மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் குரு பூஜை விழா நேற்று நடந்தது. திருவாடுதுறை ஆதீனம், 24வது மகா சன்னிதானம் அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் விழாவில் பங்கேற்று குரு பூஜையை நடத்தினார். இதையொட்டி, கோவிலில் உள்ள, 108 நாயன்மார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.