கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3361 days ago
திருவாடானை : திருவாடானை மங்களக்குடி அருகே சம்பாநெட்டி கிராமத்தில் உள்ள கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. பகலில் அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.